புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் சமூக அறிவியல் துறை உள்ளூர் உணவு பழக்க வழக்கம்" என்ற ஆராய்ச்சி தலைப்பின் கீழ் பொது மக்கள், விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து ஆண்டு தோறும் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இதில் உணவு உற்பத்தி, உணவு பழக்க வழக்கம், அதை சார்ந்த இயற்கை மற்றும் பொருளாதாரம் ஆகியவை உள்ளடக்கிய புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆராய்ச்சியானது மக்களின் உணவு பழக்க வழக்கம் என்ன என்பதை அறிந்து கொள்ள உதவுகிறது. COVID 19 சமயத்தில் மதிப்பூட்டப்பட்ட இயற்கை விவசாய பொருட்கள் கணினி மற்றும் கைபேசி மூலம் கடைகளுக்கும் பொது மக்களுக்கும் நேரடியாக சேர்ந்தன. பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஒவ்வொரு மாதமும் உள்ளூர் உணவு பழக்க வழக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 24.06.2022 மாலை 3 மணியளவில் பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் அலுவலகத்தில் பேஸ் புக், வாட்ஸ்அப், இ-மெயில், வெப்சைட், மெசேஜ் ஆகியவைகள் மூலம் சிறப்பாக வியாபாரம் செய்யும் S. வீரப்பன், யாழி பண்ணை, கூனிசெம்பட்டு, புதுச்சேரி; M. முஹம்மது சாஹிர், நல் உணவு நிறுவனம், ஷண்முகபுரம், புதுச்சேரி; ஹரிஹரசுதன், டெய்லி கிரீன்ஸ், அக்ரிடெக், புதுச்சேரி ஆகியோர்கள் உங்களுக்கு தேவையான கருத்துக்களை கூறுகின்றனர் இதன் மூலம் நீங்களும் உங்களுடைய இயற்கை சார்ந்த விலை பொருட்களை விற்பதற்கு உதவியாக இருக்கும்

The Department of Social Sciences, French Institute of Pondicherry is committed in co-coordinating the citizen and research network on the concept of “Local food system”. This scientific and citizen event is trying to take on the challenge of how to create a collaborative network that integrates sustainable food production, processing, distribution and consumption in order to enhance environmental, economic and social health in the particular context of Puducherry Bio-region. This platform permits collective thinking, discussing and suggesting specific actions on what the “food priorities” of the regions community should be. The concepts we discuss are those of local food systems, food sovereignty, social and environmental justice and agro-ecology, food systems through a gender lens and the distribution of assets and resources. French Institute propose to organise monthly meeting with the stake holders to think of and show the diversity of the food heritage of Puducherry bio-region. , During the Pandemic time, most of the organic agricultural products with value addition were sold into digital platforms globally to any business houses or ultimate consumers. Promotion activities have started in social media like face book, whatsup, Apps, e-mail, websites, messages etc. On 27-5-2022, 3.00 Pm, at French Institute of Pondicherry, the following organic product producers and entrepreneurs will discuss on marketing methods and the related issues through online.

LFS Flyer(1)