முதற்குறிப்பு அகரவரிசை
[TO TRANSLITERATED LIST]
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, ச, சா, சி, சீ, சு, செ, சே, சொ, த, தா, தி, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, ந, நா, நி, நீ, நூ, நெ, நே, நொ, நோ, ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பை, பொ, போ, ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, யா, வ, வா, வி, வீ, வெ, வே, வை.
- [2:042] அக்கு இருந்த ஆரமும்,
- [7:035] அங்கம் ஓதி ஓர் ஆறைமேற்றளிநின்றும் போந்து வந்து
- [1:006] அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடி பரவ
- [3:048] அங்கை ஆர் அழலன்(ன்),
- [1:034] அடல் ஏறு அமரும் கொடி அண்ணல்
- [1:083] அடையார் புரம்மூன்றும் அனல்வாய் விழ எய்து,
- [1:065] அடையார்தம் புரங்கள்மூன்றும்
- [4:097] அட்டுமின், இல் பலி! என்று என்று
- [5:094] அண்டத்தானை, அமரர் தொழப்படும் பண்டத்தானை
- [6:097] அண்டம் கடந்த சுவடும் உண்டோ?
- [3:064] அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார்,
- [7:055] அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத,
- [3:045] அந்தம் ஆய், உலகு ஆதியும் ஆயினான்,
- [1:039] அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல்
- [4:098] அந்தி வட்டத் திங்கள்கண்ணியன்,
- [7:083] அந்தியும் நண்பகலும்
- [6:095] அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
- [2:016] அயில் ஆரும் அம்பு அதனால் புரம்மூன்று எய்து
- [1:079] அயில் உறு படையினர்;
- [3:059] அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
- [1:037] அரவச் சடைமேல் மதி, மத்தம், விரவிப் பொலிகின்றவன்
- [6:006] அரவு அணையான் சிந்தித்து அரற்றும்(ம்) அடி;
- [1:090] அரனை உள்குவீர்!
- [6:001] அரியானை, அந்தணர்தம் சிந்தையானை,
- [1:058] அரியும், நம் வினை உள்ளன ஆசு அற
- [1:111] அருத்தனை, அறவனை,
- [5:035] அருவனாய், அத்தி ஈர் உரி போர்த்து உமை உருவனாய்,
- [6:036] அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே;
- [1:035] அரை ஆர் விரி கோவண ஆடை,
- [1:124] அலர்மகள் மலிதர, அவனியில் நிகழ்பவர்
- [6:040] அலை அடுத்த பெருங்கடல் நஞ்சு அமுதா உண்டு
- [6:072] அலை ஆர் புனல்கங்கைநங்கை காண
- [3:010] அலை, வளர் தண்மதியோடு அயலே அடக்கி,
- [6:089] அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்;
- [1:116] அவ் வினைக்கு இவ் வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
- [7:094] அழல் நீர் ஒழுகியனைய சடையும்,
- [7:054] அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன்;
- [2:019] அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருளி,
- [1:064] அறை ஆர் புனலும் மா மலரும் ஆடு அரவு
- [2:089] அறையும் பூம்புனலோடும்
- [7:019] அற்றவனாய், அடியார்தமக்கு;
- [5:001] அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
- [2:102] அன்னமென்நடை அரிவையோடு
- [1:104] ஆடல் அரவு அசைத்தான்,
- [3:001] ஆடினாய், நறுநெய்யொடு, பால், தயிர்!
- [4:036] ஆடினார் ஒருவர்போலும்;
- [6:054] ஆண்டானை, அடியேனை ஆளாக்கொண்டு;
- [6:020] ஆதிக்கண்ணான் முகத்தில் ஒன்று சென்று
- [7:097] ஆதியன்; ஆதிரையன்(ன்) அயன் மால் அறிதற்கு அரிய சோதியன்
- [3:061] ஆதியன், ஆதிரையன், அனல் ஆடிய ஆர் அழகன்,
- [4:049] ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார்,
- [6:096] ஆமயம் தீர்த்து அடியேனை ஆளாக் கொண்டார்;
- [6:088] ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை;
- [6:069] ஆராத இன்னமுதை, அம்மான்தன்னை,
- [3:014] ஆரிடம் பாடலர், அடிகள்,
- [6:037] ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி!
- [2:039] ஆரூர், தில்லை அம்பலம், வல்லம், நல்லம்,
- [6:085] ஆர்த்தான்காண், அழல்நாகம் அரைக்கு நாணா;
- [3:115] ஆலநீழல் உகந்தது இருக்கையே;
- [7:061] ஆலம்தான் உகந்து அமுதுசெய்தானை,
- [6:067] ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்தன்னை,
- [6:017] ஆறு சடைக்கு அணிவர்; அங்கைத் தீயர்;
- [6:031] இடர் கெடும் ஆறு எண்ணுதியேல், நெஞ்சே!
- [3:121] இடறினார், கூற்றை; பொடிசெய்தார், மதிலை;
- [3:004] இடரினும், தளரினும், எனது உறு நோய் தொடரினும்,
- [7:029] இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன்;
- [4:033] இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
- [3:003] இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம்
- [5:063] இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும்
- [6:094] இரு நிலன் ஆய், தீ ஆகி, நீரும் ஆகி,
- [1:082] இரும் பொன்மலை வில்லா,
- [4:024] இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன்
- [7:008] இறைகளோடு இசைந்த இன்பம்,
- [3:056] இறையவன், ஈசன், எந்தை,
- [1:112] இன்குரல் இசை கெழும் யாழ் முரலத்
- [2:099] இன்று நன்று, நாளை நன்று என்று நின்ற இச்சையால்
- [4:094] ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய்,
- [2:025] உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
- [5:041] உடையர் கோவணம், ஒன்றும் குறைவு இலர்
- [2:061] உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று உள்கித்
- [1:010] உண்ணாமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன்,
- [6:025] உயிரா வணம் இருந்து,
- [1:102] உரவு ஆர் கலையின் கவிதைப்
- [6:065] உரித்தவன்காண், உரக் களிற்றை உமையாள் ஒல்க;
- [4:032] உரித்திட்டார், ஆனையின்தோல்
- [2:054] உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்!
- [3:023] உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் திருவினான்;
- [2:086] உரையினில் வந்த பாவம்,
- [5:068] உள் ஆறாதது ஓர் புண்டரிகத்திரள்,
- [3:113] உற்று உமை சேர்வது மெய்யினையே;
- [1:029] ஊர் உலாவு பலி கொண்டு,
- [7:056] ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை,
- [1:055] ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு,
- [7:067] ஊன் அங்கத்து உயிர்ப்பு ஆய்,
- [7:082] ஊன் ஆய், உயிர் புகல் ஆய்,
- [6:012] ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து
- [4:029] ஊனினுள் உயிரை வாட்டி
- [5:050] எங்கே? என்ன, இருந்த இடம் தேடிக்கொண்டு,
- [4:084] எட்டு ஆம் திசைக்கும் [...]
- [5:054] எட்டுநாள்மலர் கொண்டு,
- [3:095] எண்திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய
- [6:099] எண்ணுகேன்; என் சொல்லி எண்ணுகேனோ,
- [6:062] எத் தாயர், எத் தந்தை, எச் சுற்றத்தார்
- [4:017] எத் தீப் புகினும்
- [2:090] எந்தை! ஈசன்! எம்பெருமான்! ஏறு அமர் கடவுள்! என்று ஏத்திச்
- [5:006] எப்போதும்(ம்) இறையும் மறவாது,
- [6:030] எம் பந்த வல்வினைநோய் தீர்த்திட்டான்காண்;
- [3:075] எம்தமது சிந்தை பிரியாத பெருமான்! என இறைஞ்சி,
- [2:040] எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும்,
- [1:097] எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று
- [1:063] எரி ஆர் மழு ஒன்று ஏந்தி,
- [3:019] எரிதர அனல் கையில் ஏந்தி,
- [1:113] எரித்தவன், முப்புரம் எரியில் மூழ்க;
- [6:005] எல்லாம் சிவன் என்ன நின்றாய், போற்றி!
- [7:042] எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்த(ம்)மொடு,
- [7:092] எற்றால் மறக்கேன்,
- [5:013] என் பொனே! இமையோர் தொழு பைங்கழல் நன்பொனே!
- [7:072] எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;
- [3:079] என்றும் அரியான், அயலவர்க்கு;
- [2:106] என்ன புண்ணியம் செய்தனை---நெஞ்சமே!
- [5:021] என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை
- [5:091] ஏ இலானை,
- [2:033] ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,
- [5:060] ஏதும் ஒன்றும் அறிவு இலர் ஆயினும்,
- [1:132] ஏர் இசையும் வட-ஆலின்கீழ் இருந்து,
- [3:070] ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு, வரி ஆமை, இவை பூண்டு,
- [1:059] ஒடுங்கும் பிணி, பிறவி, கேடு,
- [5:062] ஒருத்தனை, மூ உலகொடு தேவர்க்கும் அருத்தனை,
- [5:020] ஒருவராய் இரு மூவரும் ஆயவன்,
- [6:034] ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
- [1:050] ஒல்லை ஆறி, உள்ளம் ஒன்றி,
- [2:078] ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர்,
- [1:057] ஒள்ளிது உள்ள, கதிக்கு ஆம்;
- [5:024] ஒற்றி ஊரும் ஒளி மதி, பாம்பினை;
- [6:078] ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே
- [4:018] ஒன்று கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை;
- [5:089] ஒன்று வெண்பிறைக்கண்ணி
- [3:090] ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல்
- [6:038] ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே;
- [1:032] ஓடே கலன்; உண்பதும் ஊர் இடு பிச்சை;
- [5:066] ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன்,
- [5:009] ஓதம் மால்கடல் பரவி
- [4:063] ஓதி மா மலர்கள் தூவி
- [4:099] ஓதுவித்தாய், முன் அற உரை;
- [4:046] ஓம்பினேன் கூட்டை, வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து;
- [1:128] ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
- [7:070] கங்கை வார்சடையாய்! கணநாதா!
- [4:038] கங்கையைச் சடையுள் வைத்தார்;
- [4:066] கச்சை சேர் அரவர்போலும்;
- [4:048] கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து,
- [3:107] கடல் இடை வெங்கடுநஞ்சம் உண்ட கடவுள்,
- [5:003] கடவுளை, கடலுள்(ள்) எழு நஞ்சு உண்ட
- [7:032] கடிது ஆய்க் கடல்காற்று வந்து எற்ற,
- [4:077] கடும்பகல் நட்டம் ஆடி, கையில் ஓர் கபாலம் ஏந்தி
- [6:052] கண் அவன்காண்; கண் ஒளி சேர் காட்சியான்காண்;
- [2:048] கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,
- [6:081] கண் தலம் சேர் நெற்றி இளங்காளை கண்டாய்;
- [3:007] கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல் ஆர்க்கவே
- [3:062] கண் பொலி நெற்றியினான், திகழ் கையில் ஓர் வெண்மழுவான்,
- [1:033] கணை நீடு எரி,
- [5:070] கண்ட பேச்சினில் காளையர்தங்கள்பால்
- [5:092] கண்டுகொள்ள (அ)ரியானைக் கனிவித்துப்
- [6:051] கயிலாயமலை உள்ளார்; காரோணத்தார்;
- [5:030] கரப்பர், காலம் அடைந்தவர்தம் வினை;
- [3:037] கரம்முனம்மலரால், புனல் மலர் தூவியே கலந்து
- [4:007] கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை;
- [1:038] கரவு இன்றி நல்மாமலர் கொண்டே
- [6:086] கரு ஆகிக் கண்ணுதலாய் நின்றான்தன்னை,
- [3:041] கரு ஆர் கச்சித் திரு ஏகம்பத்து ஒருவா!
- [4:081] கரு நட்ட கண்டனை,
- [1:134] கருத்தன், கடவுள், கனல் ஏந்தி ஆடும் நிருத்தன்,
- [2:052] கருந்தடங்கணின் மாதரார் இசைசெய்ய,
- [6:073] கருமணி போல் கண்டத்து அழகன்கண்டாய்;
- [6:068] கருமணியை, கனகத்தின்குன்று ஒப்பானை,
- [3:100] கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து,
- [2:004] கரை உலாம் கடலில் பொலி சங்கம்
- [5:012] கரைந்து கைதொழுவாரையும் காதலன்;
- [7:073] கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும்,
- [3:125] கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா
- [3:076] கல் பொலி சுரத்தின் எரிகானின் இடை மாநடம் அது ஆடி,
- [1:036] கலை ஆர் மதியோடு உரநீரும்
- [1:125] கலை மலி அகல் அல்குல் அரிவைதன் உருவினன்,
- [2:058] கலை வாழும் அம் கையீர்!
- [3:040] கல்லால் நீழல் அல்லாத் தேவை
- [1:085] கல்லால் நிழல் மேய கறை சேர் கண்டா!
- [7:003] கல்வாய் அகிலும் கதிர் மா மணியும்
- [2:043] கள் ஆர்ந்த பூங் கொன்றை
- [2:009] களையும், வல்வினை;
- [7:060] கழுதை குங்குமம்
- [3:060] கறை அணி மா மிடற்றான், கரிகாடு அரங்கா உடையான்,
- [2:065] கறை அணி வேல் இலர்போலும்;
- [6:032] கற்றவர்கள் உண்ணும் கனியே, போற்றி!
- [1:080] கற்றாங்கு எரி ஓம்பி
- [4:047] கனகம் மா வயிரம் உந்தும்
- [4:058] கன்றினார் புரங்கள் மூன்றும்
- [5:093] காசனை, கனலை, கதிர் மா மணித் தேசனை
- [1:117] காடு அது, அணிகலம் கார் அரவம், பதி;
- [4:035] காடு உடைச் சுடலை நீற்றர்;
- [5:026] காடு கொண்டு அரங்காக் கங்குல்வாய்க் கணம் பாட
- [3:074] காடு பயில் வீடு, முடை ஓடு கலன்,
- [3:047] காட்டு மா அது உரித்து,
- [7:047] காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே!
- [4:020] காண்டலே கருத்து ஆய் நினைந்திருந்தேன்
- [7:045] காண்டனன் காண்டனன், காரிகையாள்தன் கருத்தனாய்
- [3:049] காதல் ஆகி, கசிந்து, கண்ணீர் மல்கி,
- [3:102] காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்
- [2:062] காயச் செவ்விக் காமற் காய்ந்து,
- [1:056] கார் ஆர் கொன்றை கலந்த முடியினர்,
- [7:036] கார் உலாவிய நஞ்சை உண்டு
- [2:084] காரைகள், கூகை, முல்லை, கள, வாகை, ஈகை,
- [5:086] காலபாசம் பிடித்து எழு தூதுவர்,
- [4:037] காலனை வீழச் செற்ற
- [3:028] காலை ஆர் வண்டு இனம் கிண்டிய,
- [4:085] காலை எழுந்து,
- [1:075] காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி,
- [5:036] கான் அறாத கடி பொழில் வண்டு இனம்
- [5:071] குசையும் அங்கையில் கோசமும் கொண்ட
- [4:039] குண்டனாய்ச் சமணரோடே கூடி
- [1:046] குண்டைக் குறள்பூதம் குழும,
- [1:013] குரவம் கமழ் நறுமென்குழல் அரிவை
- [6:015] குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;
- [7:037] குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு
- [1:114] குருந்து அவன், குருது அவன், கூர்மை அவன்
- [7:016] குரும்பைமுலை மலர்க்குழலி கொண்ட தவம் கண்டு,
- [4:101] குலம் பலம் பாவரு குண்டர்முன்னே
- [2:027] குலவு பாரிடம் போற்ற வீற்றிருந்து
- [4:053] குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணிதன்னைக்
- [5:038] குழை கொள் காதினர், கோவண ஆடையர்,
- [1:002] குறி கலந்த இசைபாடலினான்
- [4:091] குறுவித்தவா, குற்றம் நோய்வினை காட்டி!
- [2:050] குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி, கூர் எரி, காற்றின்,
- [4:001] கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர்
- [6:064] கூற்றுவன்காண், கூற்றுவனைக் குமைத்த கோன்காண்,
- [2:116] கூனல்-திங்கள்குறுங்கண்ணி கான்ற(ந்)
- [3:009] கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர்
- [6:024] கைம் மான மதகளிற்றின் உரிவையான்காண்;
- [4:090] கையது, கால் எரி நாகம்,
- [5:007] கொக்கரை, குழல், வீணை, கொடுகொட்டி,
- [3:103] கொடி உடை மும்மதில்
- [5:032] கொடி கொள் செல்வ விழாக் குணலை அறாக்
- [6:013] கொடி மாட நீள்தெருவு கூடல்,
- [7:049] கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்,
- [5:023] கொடுங் கண் வெண்தலை கொண்டு,
- [3:006] கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
- [1:086] கொட்டும் பறை சீரால் குழும,
- [3:082] கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை, புரிநூலொடு குலாவி
- [5:043] கொல்லத்தான் நமனார் தமர் வந்தக்கால்,
- [5:034] கொல்லியான், குளிர் தூங்கு குற்றாலந்தான்,
- [5:033] கொல்லை ஏற்றினர், கோள் அரவத்தினர்,
- [5:039] கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை
- [7:081] கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவே
- [3:091] கோங்கமே, குரவமே, கொழு மலர்ப் புன்னையே,
- [2:006] கோடல், கோங்கம், குளிர் கூவிளமாலை,
- [5:053] கோணல் மா மதி சூடி
- [7:002] கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர்;
- [7:017] கோவலன் நான்முகன் வானவர்கோனும் குற்றேவல் செய்ய,
- [4:096] கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன்முன்
- [3:071] கோழை மிடறு ஆக, கவி கோளும் இல ஆக,
- [5:031] கோனைக் காவிக் குளிர்ந்த மனத்தராய்த்
- [3:081] சங்கு அமரும் முன்கை மடமாதை ஒருபால்
- [5:078] சங்கு உலாம் முன்கைத் தையல் ஓர்பாகத்தன்,
- [1:115] சங்கு ஒளிர் முன்கையர்தம் இடையே
- [1:011] சடை ஆர் புனல் உடையான்,
- [3:008] சடை உடையானும், நெய் ஆடலானும்,
- [2:014] சடையானை, சந்திரனோடு செங்கண் அரா உடையானை
- [2:018] சடையாய்! எனுமால்; சரண் நீ! எனுமால்;
- [2:037] சதுர(ம்)மறைதான் துதிசெய்து வணங்கும்
- [3:036] சந்தம், ஆர், அகிலொடு, சாதி, தேக்க(ம்)மரம்,
- [3:043] சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்,
- [6:049] சந்திரனும் தண்புனலும் சந்தித்தான்காண்;
- [6:004] சந்திரனை மா கங்கைத் திரையால் மோத
- [2:094] சாகை ஆயிரம் உடையார்,
- [7:058] சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து,
- [2:120] சாந்தம் வெண்நீறு எனப் பூசி,
- [4:110] சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு
- [5:081] சிட்டனை, சிவனை, செழுஞ்சோதியை,
- [1:091] சித்தம் தெளிவீர்காள்!
- [7:050] சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!
- [5:097] சிந்திப்பார் மனத்தான், சிவன்,
- [4:092] சிந்திப்பு அரியன
- [2:060] சிந்தை இடையார், தலையின்மிசையார்,
- [5:028] சிந்தை வண்ணத்தராய், திறம்பா வணம்
- [5:027] சிந்தை வாய்தல் உளான், வந்து; சீரியன்;
- [7:030] சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து
- [1:022] சிலைதனை நடு இடை நிறுவி,
- [4:008] சிவன் எனும் ஓசை அல்லது, அறையோ, உலகில் திரு நின்ற செம்மை உளதே?
- [1:041] சீர் அணி திகழ் திரு மார்பில் வெண்நூலர்,
- [2:036] சீர் ஆர் கழலே தொழுவீர்!
- [3:080] சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ
- [2:010] சீரின் ஆர் மணியும்
- [1:087] சுடு கூர் எரிமாலை அணிவர்;
- [1:118] சுடுமணி உமிழ் நாகம் சூழ்தர
- [4:002] சுண்ண வெண்சந்தனச் சாந்தும்,
- [3:124] சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து,
- [3:067] சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம்,
- [2:031] சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து,
- [6:016] சூலப் படை உடையார் தாமே போலும்;
- [4:019] சூலப் படையானை;
- [1:018] சூலம் படை; சுண்ணப்பொடி சாந்தம், சுடுநீறு;
- [4:022] செஞ்சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
- [7:023] செடியேன் தீவினையில்-தடுமாறக் கண்டாலும்
- [7:026] செண்டு ஆடும் விடையாய்! சிவனே!
- [4:069] செத்தையேன், சிதம்ப நாயேன், செடியனேன்,
- [2:001] செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே
- [1:028] செப்பம் நெஞ்சே, நெறி கொள்!
- [2:110] செம்பொன் ஆர்தரு வேங்கையும், ஞாழலும்,
- [7:068] செம்பொன்மேனி வெண்நீறு அணிவானை,
- [1:005] செய் அருகே புனல் பாய,
- [4:016] செய்யர்; வெண்நூலர்;
- [3:051] செய்யனே! திரு ஆலவாய் மேவிய ஐயனே!
- [6:007] செல்வப் புனல் கெடில வீரட்ட(ம்)மும்,
- [4:086] செற்றுக் களிற்று உரி கொள்கின்றஞான்று
- [1:129] சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண் என்று
- [6:075] சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகிச்
- [4:012] சொல் மாலை பயில்கின்ற குயில்இனங்காள்!
- [4:011] சொல்-துணை வேதியன், சோதி வானவன்,
- [6:074] சொல்லானை, பொருளானை, சுருதியானை,
- [3:005] தக்கன் வேள்வி தகர்த்தவன்,
- [5:073] தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி
- [1:020] தட நிலவிய மலை நிறுவி,
- [1:101] தண் ஆர் திங்கள்,
- [7:098] தண் இயல் வெம்மையினான்;
- [7:038] தம்மானை அறியாத சாதியார் உளரே?
- [7:034] தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும்
- [5:058] தலை எலாம் பறிக்கும் சமண்கையர்
- [7:057] தலைக்கலன் தலைமேல்-தரித்தானை,
- [7:004] தலைக்குத் தலைமாலை அணிந்தது என்னே?
- [4:009] தலையே, நீ வணங்காய்!
- [2:119] தழை கொள் சந்தும்(ம்), அகிலும், மயில்பீலியும்
- [5:019] தளரும் கோள் அரவத்தொடு தண்மதி
- [2:111] தளிர் இள வளர் என உமை பாட,
- [3:087] தளிர் இள வளர் ஒளி தனது எழில்
- [4:079] தன் மானம் காப்பது ஆகித் தையலார்வலையுள் ஆழ்ந்து
- [4:105] தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன்;
- [6:066] தாய் அவனை, வானோர்க்கும் ஏனோருக்கும்
- [3:127] தார் சிறக்கும் சடைக்கு அணி வள்ளலின்
- [4:040] தான் அலாது உலகம் இல்லை;
- [7:100] தான் எனை முன் படைத்தான்;
- [2:022] திகழும் திருமாலொடு நான்முகனும்
- [3:097] திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய
- [3:101] திரிதரு மா மணி நாகம் ஆடத் திளைத்து,
- [7:011] திரு உடையார், திருமால் அயனாலும் உரு உடையார்,
- [6:029] திருமணியை, தித்திக்கும் தேனை, பாலை,
- [3:058] திரு மலர்க்கொன்றைமாலை
- [2:032] திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,
- [2:071] திருந்த மதி சூடி, தெண்நீர் சடைக் கரந்து,
- [3:089] திருந்து மா களிற்று இள மருப்பொடு
- [5:076] திருவின் நாதனும், செம்மலர்மேல் உறை உருவனாய்,
- [7:069] திருவும் மெய்ப்பொருளும் செல்வமும், எனக்கு உன் சீர் உடைக் கழல்கள் என்று எண்ணி,
- [7:065] திருவும், வண்மையும், திண் திறல் அரசும்,
- [6:047] திருவே, என் செல்வமே, தேனே,
- [3:031] திரை தரு பவளமும், சீர் திகழ் வயிரமும்
- [6:070] தில்லைச் சிற்றம்பலமும், செம்பொன்பள்ளி,
- [7:039] தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்;
- [1:045] துஞ்ச வருவாரும், தொழுவிப்பாரும்
- [3:022] துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்,
- [1:044] துணி வளர் திங்கள் துளங்கி விளங்க,
- [3:018] துள மதி உடை மறி தோன்று கையினர்,
- [2:088] துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன்
- [3:116] துன்று கொன்றை நம் சடையதே;
- [5:046] துன்னக் கோவண, சுண்ணவெண்நீறு அணி,
- [2:044] துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,
- [7:096] தூ வாயா! தொண்டு செய்வார் படு துக்கங்கள் காவாயா?
- [6:023] தூண்டு சுடர் அனைய சோதிகண்டாய்;
- [6:035] தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி,
- [4:055] தெண் திரை தேங்கி ஓதம் சென்று
- [4:034] தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
- [1:053] தேவராயும், அசுரராயும்,
- [2:064] `தேவா! சிறியோம் பிழையைப் பொறுப்பாய்!
- [7:010] தேன்நெய் புரிந்து உழல் செஞ்சடை
- [2:045] தையல் ஓர்கூறு உடையான்,
- [2:114] தொண்டர் அஞ்சு களிறும்(ம்) அடக்கி,
- [7:084] தொண்டர் அடித்தொழலும், சோதி இளம்பிறையும்,
- [6:079] தொண்டர்க்குத் தூநெறி ஆய் நின்றான்தன்னை,
- [4:075] தொண்டனேன் பட்டது என்னே!
- [6:059] தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும்,
- [2:028] தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த,
- [2:020] தொழும் ஆறு வல்லார்,
- [1:001] தோடு உடைய செவியன் விடை ஏறி
- [1:103] தோடு உடையான் ஒரு காதில்,
- [4:065] தோடு உலாம் மலர்கள் தூவித்
- [1:095] தோடு ஓர் காதினன்;
- [4:059] தோற்றினான் எயிறு கவ்வித்
- [5:011] தோற்றும் கோயிலும், தோன்றிய கோயிலும்,
- [4:030] நங்கையைப் பாகம் வைத்தார்
- [7:043] நஞ்சி, இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
- [1:121] நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த
- [7:080] நத்தார் புடை ஞானன்;
- [2:097] நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி,
- [4:026] நம்பனே! எங்கள் கோவே! நாதனே! [...]
- [4:044] நம்பனை, நகரம்மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை,
- [6:046] நம்பனை, நால்வேதம் கரை கண்டானை,
- [7:088] நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர்
- [3:096] நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர்,
- [2:055] நலச் சங்கவெண்குழையும் தோடும் பெய்து,
- [2:059] நலம் கொள் முத்தும் மணியும் அணியும்
- [5:052] நல்லர்; நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர்;
- [1:081] நல்லார், தீ மேவும் தொழிலார்,
- [6:048] நல்லான் காண், நால்மறைகள் ஆயினான்காண்,
- [2:011] நல்லானை, நால்மறையோடு இயல் ஆறு அங்கம்
- [1:074] நறவம் நிறை வண்டு
- [1:061] நறை கொண்ட மலர் தூவி,
- [3:021] நனவிலும் கனவிலும், நாளும்,
- [1:098] நன்று உடையானை, தீயது இலானை,
- [5:042] நன்று நாள்தொறும் நம் வினை போய் அறும்
- [6:098] நாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;
- [1:062] நாள் ஆய போகாமே,
- [3:016] நிணம் படு சுடலையில்,
- [2:038] நித்தலும் நியமம் செய்து,
- [3:123] நிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர்,
- [2:017] நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
- [6:043] நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை;
- [3:042] நிறை வெண்திங்கள்வாள்முக மாதர் பாட,
- [5:029] நிறைக்க வாலியள் அல்லள்,
- [6:014] நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார்;
- [1:093] நின்று மலர் தூவி,
- [2:005] நீடல் மேவு நிமிர்புன்சடைமேல்
- [1:100] நீடு அலர் சோதி வெண்பிறையோடு நிரை கொன்றை
- [3:033] நீர் இடைத் துயின்றவன்,
- [2:015] நீரானே! நீள்சடைமேல்
- [7:093] நீரும் மலரும் நிலவும் சடைமேல்
- [2:051] நீருள் ஆர் கயல் வாவி சூழ் பொழில்
- [2:083] நீல நல் மா மிடற்றன்;
- [5:051] நீல மா மணிகண்டத்தர்;
- [1:094] நீல மா மிடற்று ஆலவாயிலான்
- [2:109] நீலம் ஆர்தரு கண்டனே!
- [7:020] நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்;
- [5:098] நீறு அலைத்தது ஓர் மேனி,
- [6:039] நீறு ஏறு திருமேனி உடையான்கண்டாய்;
- [1:135] நீறு சேர்வது ஒர் மேனியர்,
- [7:064] நீறு தாங்கிய திருநுதலானை,
- [3:078] நீறு, வரி ஆடு அரவொடு, ஆமை, மனவு, என்பு, நிரை பூண்பர்;
- [2:013] நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது
- [6:028] நீற்றினையும் நெற்றிமேல் இட்டார்போலும்;
- [1:048] நூல் அடைந்த கொள்கையாலே
- [4:050] நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள
- [4:106] நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி
- [7:005] நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
- [4:051] நெற்றிமேல் கண்ணினானே!
- [2:087] நேரியன் ஆகும்; அல்லன், ஒருபாலும்;
- [6:093] நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்கக் கண்டு,
- [7:021] நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைத்திருந்தேன்;
- [6:010] நோதங்கம் இல்லாதார்; நாகம் பூண்டார்;
- [4:054] பகைத்திட்டார் புரங்கள்மூன்றும் பாறி,
- [1:066] பங்கம் ஏறு மதி சேர் சடையார்,
- [7:006] படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி
- [3:093] படியுள் ஆர் விடையினர்,
- [4:052] படு குழிப் பவ்வத்து அன்ன
- [4:083] படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன்
- [1:089] படை ஆர்தரு பூதப் பகடு ஆர் உரி போர்வை
- [2:100] படை கொள் கூற்றம் வந்து,
- [5:067] படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள்
- [3:027] படையினார், வெண்மழு; பாய் புலித்தோல் அரை உடையினார்;
- [5:087] பட்டம் நெற்றியர்; பாய் புலித் தோலினர்;
- [2:092] பட்டம், பால்நிற மதியம்,
- [5:005] பட்டி ஏறு உகந்து ஏறி,
- [5:049] பண் காட்டிப் படி ஆய தன் பத்தர்க்குக் கண் காட்டி,
- [2:082] பண் நிலாவிய மொழி உமை பங்கன்,
- [1:120] பணிந்தவர் அருவினை பற்று அறுத்து
- [5:047] பண்டு செய்த பழவினையின் பயன்
- [2:049] பண்ணின் நேர் மொழி மங்கைமார்
- [5:010] பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
- [1:003] பத்தரோடு பலரும் பொலிய(ம்) மலர்
- [4:023] பத்தனாய்ப் பாடமாட்டேன்
- [7:051] பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்,
- [7:046] பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி,
- [1:126] பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற உம்பர்
- [2:072] பந்து ஆர் விரல் மடவாள் பாகமா,
- [3:002] பந்து சேர் விரலாள், பவளத்துவர்வாயினாள்,
- [3:112] பரசு பாணியர், பாடல் வீணையர்,
- [2:035] பரவக் கெடும், வல்வினை
- [7:077] பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
- [2:101] பருக் கை யானை மத்தகத்து
- [4:014] பருவரை ஒன்று சுற்றி
- [1:047] பல் அடைந்த வெண்தலையில்
- [4:113] பவளத்தடவரை போலும், திண்தோள்கள்
- [2:079] பவனம் ஆய், சோடை ஆய், நா எழா,
- [3:106] பள்ளம் அது ஆய படர்சடைமேல்
- [5:015] பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
- [4:015] பற்று அற்றார் சேர் பழம்பதியை
- [5:002] பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்,
- [6:091] பன்னிய செந்தமிழ் அறியேன்; கவியேல் மாட்டேன்;
- [5:AAA] பன்னில் ஊறும் பழத்தினும் இன் சுவை [fragment quoted by Tāyumāṉavar]
- [5:014] பாசம் ஒன்று இலராய்,
- [4:061] பாசமும் கழிக்ககில்லா அரக்கரைப் படுத்து,
- [6:077] பாட அடியார், பரவக் கண்டேன்;
- [1:007] பாடக மெல் அடிப் பாவையோடும்
- [3:073] பாடல் மறை, சூடல் மதி,
- [2:095] பாடல் வண்டு அறை கொன்றை,
- [1:105] பாடலன் நால்மறையன்; படி பட்ட கோலத்தன்;
- [4:004] பாடு இளம் பூதத்தினானும், பவளச்செவ்வாய் வண்ணத்தானும்,
- [6:057] பாட்டு ஆன நல்ல தொடையாய், போற்றி!
- [7:091] பாட்டும் பாடிப் பரவித் திரிவார்
- [5:083] பாணத்தால் மதில்மூன்றும் எரித்தவன்;
- [6:026] பாதித் தன் திரு உருவில் பெண் கொண்டானை,
- [3:114] பாயும் மால்விடைமேல் ஒரு பாகனே;
- [4:089] பார் இடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி,
- [4:082] பார் கொண்டு மூடிக் கடல் கொண்டஞான்று நின் பாதம் எல்லாம்
- [6:022] பாரார் பரவும் பழனத்தானை,
- [6:080] பாரானை; பாரினது பயன் ஆனானை;
- [1:016] பால் உந்து உறு திரள் ஆயின பரமன்
- [2:046] பால் ஊரும் மலைப்பாம்பும்
- [5:099] பாவமும் பழி பற்று அற வேண்டுவீர்!
- [4:080] பாளை உடைக் கமுகு ஓங்கி,
- [5:008] பாறு அலைத்த படுவெண்தலையினன்;
- [7:033] பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ?
- [3:026] பிடி எலாம் பின் செல,
- [7:001] பித்தா! பிறைசூடீ! பெருமானே! அருளாளா!
- [1:127] பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
- [2:070] பிரமன் ஊர், வேணுபுரம், புகலி,
- [7:089] பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்தக்கால்
- [6:011] பிறவாதே தோன்றிய பெம்மான்தன்னை,
- [1:019] பிறை அணி படர்சடைமுடி
- [7:099] பிறை அணி வாள்நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
- [1:071] பிறை கொள் சடையார்; புலியின் உரியர்;
- [2:077] பீடினால் பெரியோர்களும்,
- [5:095] புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர்;
- [2:026] புடையின் ஆர் புள்ளி கால் பொருந்திய
- [1:008] புண்ணியர், பூதியர், பூதநாதர்,
- [6:076] புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன்காண்,
- [2:093] புரை செய் வல்வினை தீர்க்கும் புண்ணியர்;
- [1:130] புலன் ஐந்தும் பொறி கலங்கி,
- [2:103] புல்கு பொன்நிறம் புரிசடை
- [1:021] புவம், வளி, கனல், புனல், புவி, கலை,
- [3:119] புள்ளித்தோல் ஆடை; பூண்பது நாகம்;
- [7:062] புற்றில் வாள் அரவு ஆர்த்த
- [2:021] புனல் ஆடிய புன்சடையாய்!
- [1:084] புனையும் விரிகொன்றைக் கடவுள்,
- [2:003] பூ அலர்ந்தன கொண்டு
- [1:024] பூ ஆர் கொன்றைப் புரிபுன்சடை ஈசா! காவாய்!
- [1:069] பூ ஆர் மலர் கொண்டு அடியார் தொழுவார்;
- [1:123] பூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;
- [5:048] பூ மேலானும் பூமகள் கேள்வனும்
- [5:022] பூ வணத்தவன்; புண்ணியன்;
- [3:122] பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள்,
- [7:015] பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன்;
- [1:054] பூத் தேர்ந்து ஆயன கொண்டு
- [4:064] பூதத்தின் படையர்; பாம்பின் பூணினர்;
- [2:081] பூதத்தின் படையினீர்!
- [2:074] பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன் ஊர்,
- [5:077] பூரியா வரும், புண்ணியம்; பொய் கெடும்;
- [5:065] பூவனூர்ப் புனிதன் திருநாமம் தான்
- [2:069] பெண் அமர் மேனியினாரும்,
- [2:057] பெண் அமரும் திருமேனி உடையீர்!
- [3:084] பெண் இயல் உருவினர், பெருகிய புனல் விரவிய பிறைக்- கண்ணியர்,
- [5:088] பெருகல் ஆம், தவம்; பேதைமை தீரல் ஆம்;
- [6:084] பெருந்தகையை, பெறற்கு அரிய மாணிக்கத்தை,
- [4:073] பெருந் திரு இமவான் பெற்ற
- [3:063] பைங்கோட்டு மலர்ப் புன்னைப் பறவைகாள்!
- [3:030] பைத்த பாம்போடு, அரைக் கோவணம்,
- [1:042] பைம் மா நாகம், பல்மலர்க்கொன்றை,
- [2:056] பொங்கு நூல் மார்பினீர்!
- [2:096] பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை மார்பன்,
- [2:091] பொங்கு வெண்மணல் கானல்
- [7:028] பொடி ஆர் மேனியனே!
- [2:113] பொடி இலங்கும் திருமேனியாளர்,
- [1:040] பொடி உடை மார்பினர்,
- [1:068] பொடி கொள் உருவர், புலியின் அதளர்,
- [2:104] பொடி கொள் மேனி வெண்நூலினர்,
- [2:118] பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி,
- [4:041] பொய் விராம் மேனி
- [6:027] பொய்ம் மாயப்பெருங்கடலில் புலம்பாநின்ற
- [4:042] பொருத்திய குரம்பைதன்னைப்
- [6:071] பொருப்பள்ளி,
- [5:059] பொரும் ஆற்றின் படை வேண்டி,
- [6:033] பொரும் கை மதகரி உரிவைப் போர்வையானை,
- [7:076] பொருவனார்; புரிநூலர்; புணர்முலை உமையவளோடு மருவனார்;
- [4:031] பொள்ளத்த காயம் ஆய பொருளினை,
- [6:056] பொறை உடைய பூமி, நீர், ஆனாய்! போற்றி!
- [4:109] பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு, விண்ணப்பம்
- [7:024] பொன் ஆர் மேனியனே!
- [3:077] பொன் இயல் பொருப்பு அரையன்மங்கை ஒருபங்கர்,
- [5:096] பொன் உள்ளத் திரள் புன்சடையின் புறம்,
- [2:024] பொன் ஏர்தரு மேனியனே!
- [7:025] பொன் செய்த மேனியினீர்; புலித்தோலை அரைக்கு அசைத்தீர்;
- [1:077] பொன் திரண்டன்ன புரிசடை புரள,
- [7:059] பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை,
- [1:049] போகம் ஆர்த்த பூண்முலையாள்
- [6:050] போர் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை,
- [6:002] மங்குல்மதி தவழும் மாட வீதி
- [3:120] மங்கையர்க்கு அரசி---வளவர்கோன் பாவை,
- [4:057] மஞ்சனே! மணியும் ஆனாய்;
- [4:027] மடக்கினார், புலியின்தோலை;
- [3:118] மடல் மலி கொன்றை, துன்று வாள் எருக்கும்,
- [3:105] மடல் வரை இல் மது விம்மு சோலை
- [7:090] மடித்து ஆடும் அடிமைக்கண் அன்றியே
- [1:023] மடையில் வாளை பாய
- [5:069] மட்டு இட்ட(க்) குழலார் சுழலில்
- [2:047] மட்டு இட்ட புன்னை அம் கானல் மடமயிலை
- [3:085] மட்டு ஒளி விரிதரு மலர் நிறை
- [5:085] மட்டு வார்குழலாளொடு மால்விடை
- [3:109] மண் அது உண்ட (அ)ரி மலரோன் காணா
- [6:058] மண் அளந்த மணிவண்ணர்தாமும்,
- [2:041] மண் புகார், வான்புகுவர்; மனம் இளையார்;
- [2:117] மண்டு கங்கை சடையில் கரந்தும்,
- [3:024] மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம், வைகலும்;
- [2:067] மண்ணும் ஓர் பாகம் உடையார்;
- [3:088] மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல்,
- [7:007] மத்தயானை ஏறி, மன்னர் சூழ வருவீர்காள்!
- [1:012] மத்தா வரை நிறுவி, கடல் கடைந்து
- [3:015] மந்திர மறையவர்,
- [2:066] மந்திரம் ஆவது நீறு; வானவர்மேலது நீறு;
- [5:075] மரக் கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி,
- [3:017] மரு அமர் குழல் உமை பங்கர்,
- [1:025] மரு ஆர் குழலிமாது ஓர்பாகம் ஆய்
- [7:053] மரு ஆர் கொன்றை மதி சூடி,
- [1:110] மருந்து அவன், வானவர் தானவர்க்கும் பெருந்தகை,
- [3:092] மருந்து அவை; மந்திரம், மறுமை நன்நெறி அவை;
- [3:025] மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
- [4:076] மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன்
- [4:107] மருள்-துயர் தீர
- [7:013] மலை ஆர் அருவித்திரள் மா மணி உந்தி,
- [5:037] மலைக் கொள் ஆனை மயக்கிய வல்வினை
- [7:009] மலைக்கு(ம்) மகள் அஞ்ச
- [1:076] மலையினார் பருப்பதம், துருத்தி,
- [2:023] மழை ஆர் மிடறா! மழுவாள் உடையாய்!
- [2:030] மறம் பயம் மலிந்தவர்
- [3:126] மறி ஆர் கரத்து எந்தை,
- [4:060] மறை அணி நாவினானை,
- [4:043] மறை அது பாடிப் பிச்சைக்கு என்று
- [1:052] மறை உடையாய்! தோல் உடையாய்!
- [7:075] மறைகள் ஆயினநான்கும், மற்று உள பொருள்களும்,
- [7:066] மறையவன்(ன்) ஒருமாணி வந்து அடைய,
- [2:012] மறையானை, மாசு இலாப் புன்சடை மல்கு வெண் பிறையானை,
- [5:016] மறையும் ஓதுவர்; மான்மறிக் கையினர்;
- [7:048] மற்றுப் பற்று எனக்கு இன்றி,
- [1:017] மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள்
- [4:071] மனைவி தாய் தந்தை மக்கள்
- [1:096] மன்னி ஊர் இறை;
- [4:100] மன்னும் மலைமகள் கையால் வருடின;
- [4:056] மா-இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும்போலும்;
- [5:044] மா மாத்து ஆகிய மால் அயன் மால்கொடு
- [4:104] மாசு இல் ஒள்வாள் போல் மறியும்
- [5:090] மாசு இல் வீணையும், மாலை மதியமும்,
- [7:087] மாட மாளிகை கோபுரத்தொடு
- [5:084] மாட்டுப் பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம்
- [4:108] மாணிக்கு உயிர் பெறக் கூற்றை உதைத்தன
- [4:003] மாதர்ப் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி,
- [1:136] மாதர் மடப்பிடியும் மட அன்னமும் அன்னது
- [6:061] மாதினை ஓர் கூறு உகந்தாய்!
- [3:020] மாது அமர் மேனியன் ஆகி,
- [5:045] மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்
- [2:112] மாது ஓர்கூறு உகந்து, ஏறு அது ஏறிய
- [4:088] மாலினை மால் உற நின்றான்,
- [1:106] மாறு இல் அவுணர் அரணம்(ம்) அவை மாய,
- [6:053] மான் ஏறு கரம் உடைய வரதர்போலும்;
- [3:039] மானின் நேர் விழி மாதராய்!
- [7:079] மானும், மரை இனமும், மயில் இனமும்,
- [3:013] மின் அன எயிறு உடை விரவலோர்கள்தம்
- [1:108] மின் இயல் செஞ்சடை மேல் விளங்கும் மதி
- [3:011] மின் இயல் செஞ்சடை வெண்பிறையன்,
- [2:105] மின் உலாவிய சடையினர்,
- [2:063] மின்னும் சடைமேல் இளவெண்திங்கள் விளங்கவே,
- [7:074] மின்னும் மா மேகங்கள்
- [7:095] மீளா அடிமை உமக்கே ஆள் ஆய்,
- [6:021] முடித் தாமரை அணிந்த மூர்த்திபோலும்;
- [7:044] முடிப்பது கங்கையும், திங்களும்;
- [7:041] முது வாய் ஓரி கதற,
- [2:034] முத்தன், மிகு மூ இலைநல்வேலன்,
- [7:052] முத்தா முத்தி தர வல்ல
- [5:017] முத்தினை, பவளத்தை,
- [4:074] முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும்
- [3:046] முத்து இலங்கு முறுவல்(ல்) உமை அஞ்சவே
- [5:061] முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரைப் புத்தூரன்
- [4:021] முத்து விதானம்; மணி பொன் கவரி;
- [1:027] முந்தி நின்ற வினைகள் அவை போகச் சிந்தி, நெஞ்சே!
- [5:025] முந்தி மூ எயில் எய்த முதல்வனார்,
- [7:031] முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில்முட்டம்,
- [3:099] முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய
- [3:086] முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ
- [5:018] முற்றிலா முலையாள் இவள் ஆகிலும்,
- [1:088] முற்றும் சடைமேல் முதிரா இளம்பிறையன்,
- [6:063] முன் ஆனைத்தோல் போர்த்த மூர்த்திதன்னை;
- [4:070] முன்-துணை ஆயினானை,
- [4:028] முன்பு எலாம் இளையகாலம் மூர்த்தியை நினையாது ஓடி,
- [2:121] முன்னம் நின்ற முடக்கால் முயற்கு அருள்செய்து,
- [5:057] முன்னமே நினையாதொழிந்தேன்,
- [7:022] முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு அரிது ஆய பிரான்,
- [2:029] முன்னிய கலைப்பொருளும், மூ உலகில் வாழ்வும்,
- [3:035] முன்னை நால்மறை அவை முறைமுறை,
- [4:010] முளைக்கதிர் இளம்பிறை மூழ்க,
- [6:019] முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி;
- [1:119] முள்ளின்மேல் முது கூகை முரலும் சோலை,
- [6:090] மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை,
- [6:092] மூ இலை வேல் கையானை, மூர்த்தி தன்னை,
- [6:044] மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே!
- [6:060] மூத்தவனை, வானவர்க்கு; மூவா மேனி முதலவனை;
- [7:018] மூப்பதும் இல்லை; பிறப்பதும் இல்லை;
- [4:005] மெய் எலாம் வெண்ணீறு சண்ணித்த மேனியான்
- [6:042] மெய்த்தானத்து அகம்படியுள் ஐவர் நின்று
- [1:131] மெய்த்து ஆறுசுவையும்(ம்), ஏழ் இசையும்(ம்),
- [7:063] மெய்யை முற்றப் பொடிப் பூசி
- [4:087] மேவித்து நின்று விளைந்தன,
- [1:015] மை ஆடிய கண்டன்,
- [5:056] மைக் கொள் கண் உமை பங்கினன்,
- [1:004] மைம் மரு பூங்குழல்கற்றை துற்ற
- [3:117] யாமாமாநீ யாமாமா
- [7:071] யாழைப் பழித்தன்ன மொழி மங்கை ஒருபங்கள்,
- [6:041] வகை எலாம் உடையாயும் நீயே என்றும்,
- [1:043] வடம் திகழ் மென்முலையாளைப்
- [5:004] வட்டனை(ம்), மதிசூடியை, வானவர்- சிட்டனை,
- [6:018] வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும்;
- [2:108] வடி கொள் மேனியர், வான மா மதியினர்,
- [7:085] வடிவு உடை மழு ஏந்தி, மதகரி உரி போர்த்து
- [4:103] வடிவு உடை மாமலைமங்கை பங்கா!
- [1:060] வண் தரங்கப் புனல் கமல மது மாந்தி
- [1:009] வண்டு ஆர் குழல் அரிவையொடு
- [3:083] வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ,
- [3:066] வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல் வரி அரவம்
- [6:045] வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும்
- [3:034] வண்ண மா மலர்கொடு வானவர் வழிபட,
- [6:009] வண்ணங்கள் தாம் பாடி, வந்து நின்று
- [5:040] வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள்
- [1:099] வம்பு ஆர் குன்றம், நீடு உயர் சாரல்,
- [3:110] வரம் அதே கொளா,
- [1:078] வரி வளர் அவிர் ஒளி அரவு அரை தாழ,
- [2:080] வரிய மறையார், பிறையார்,
- [4:067] வரைகிலேன், புலன்கள் ஐந்தும்;
- [2:098] வரைத்தலைப் பசும்பொனோடு
- [7:040] வள் வாய மதி மிளிரும் வளர்சடையினானை,
- [4:006] வன பவளவாய் திறந்து,
- [2:007] வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
- [3:032] வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன்,
- [1:092] வாசி தீரவே, காசு நல்குவீர்!
- [2:076] வாடிய வெண்தலைமாலை சூடி,
- [3:065] வார் அணவு முலை மங்கை பங்கினராய்,
- [1:072] வார் ஆர் கொங்கை மாது ஓர்பாகம் ஆக,
- [1:109] வார் உறு வனமுலை மங்கை பங்கன்,
- [3:029] வாரு மன்னும் முலை மங்கை
- [3:054] வாழ்க --- அந்தணர், வானவர், ஆன் இனம்!
- [7:078] வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
- [3:068] வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின்மிசை
- [2:068] வான் அமர் திங்களும் நீரும்
- [1:073] வான் ஆர் சோதி மன்னு சென்னி,
- [2:008] வான் உலாவும் மதி
- [4:095] வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர்மதியோடு
- [6:082] வானத்து இளமதியும் பாம்பும்
- [1:070] வானத்து உயர் தண்மதி தோய் சடைமேல்
- [5:080] வானம் சேர் மதி சூடிய மைந்தனை
- [4:093] வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து
- [3:069] வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மாகடல்விடம்
- [6:087] வானவன்காண்; வானவர்க்கும் மேல் ஆனான்காண்;
- [1:014] வானில் பொலிவு எய்தும் மழைமேகம்
- [3:053] வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடை,
- [3:072] விங்கு விளை கழனி, மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம்,
- [4:013] விடகிலேன், அடிநாயேன்;
- [2:122] விடை அது ஏறி,
- [7:027] விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க்கொன்றையினாய்!
- [3:AAA] விடைத்தவர் புரங்கள் மூன்றும் [veḷḷip patikam]
- [3:057] விடையவன், விண்ணும் மண்ணும் தொழ நின்றவன்,
- [7:086] விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;
- [4:111] விடையும் விடைப் பெரும் பாகா!
- [2:053] விண் அமர்ந்தன மும்மதில்களை வீழ வெங்கணையால் எய்தாய்!
- [6:083] விண் ஆகி, நிலன் ஆகி, விசும்பும் ஆகி,
- [2:075] விண் இயங்கும் மதிக்கண்ணியான்,
- [3:104] விண் கொண்ட தூ மதி சூதி
- [5:082] விண்ட மா மலர் கொண்டு விரைந்து,
- [2:002] விண்டு எலாம் மலர(வ்) விரை நாறு தண் தேன் விம்மி,
- [3:094] விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
- [4:072] விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர்போலும்
- [1:030] விதி ஆய், விளைவு ஆய்,
- [1:122] விரிதரு புலி உரி விரவிய அரையினர்,
- [2:107] விருது குன்ற, மாமேரு வில், நாண் அரவா,
- [3:050] விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே,
- [5:074] விரும்பி ஊறு விடேல், மட நெஞ்சமே!
- [3:055] விரை ஆர் கொன்றையினாய்! விடம் உண்ட மிடற்றினனே!
- [1:031] விழுநீர், மழுவாள்படை,
- [2:073] விளங்கிய சீர்ப் பிரமன் ஊர்,
- [5:055] வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர் கூறன் ஆகிலும்,
- [6:008] விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான்காண்,
- [3:038] வினவினேன், அறியாமையில்(ல்); உரைசெய்ம்மின், நீர்!
- [3:052] வீடு அலால் அவாய் இலா அய்,
- [7:012] வீழக் காலனைக் கால்கொடு பாய்ந்த விலங்கலான்,
- [1:051] வெங் கண் ஆனை ஈர் உரிவை போர்த்து,
- [2:115] வெங் கள் விம்மு குழல் இளையர் ஆட
- [1:026] வெங் கள் விம்மு வெறி ஆர் பொழில்-சோலை
- [4:025] வெண்ணிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து
- [3:098] வெண்மதி தவழ் மதில் மிழலை உளீர்,
- [3:044] வெந்த குங்கிலியப்புகை விம்மவே
- [1:107] வெந்த வெண்நீறு அணிந்து,
- [1:133] வெந்த வெண்பொடிப் பூசும் மார்பின் விரிநூல் ஒருபால் பொருந்த,
- [5:079] வெள் எருக்கு அரவம் விரவும் சடை
- [4:045] வெள்ளத்தைச் சடையில் வைத்த
- [4:068] வெள்ளநீர்ச் சடையர்போலும்;
- [4:112] வெள்ளிக் குழைத்துணி போலும் கபாலத்தன்;
- [6:003] வெறி விரவு கூவிளநல்-தொங்கலானை
- [4:078] வென்றிலேன், புலன்கள் ஐந்தும்;
- [5:100] வேத நாயகன்; வேதியர்நாயகன்;
- [1:067] வேதம் ஓதி, வெண்நூல் பூண்டு,
- [3:108] வேத வேள்வியை நிந்தனை செய்து
- [3:012] வேதியன், விண்ணவர் ஏத்த நின்றான்,
- [4:062] வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா! என்று என்று ஓதியே,
- [4:102] வேம்பினைப் பேசி, விடக்கினை ஓம்பி,
- [2:085] வேய் உறு தோளி பங்கன்,
- [3:111] வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்
- [5:064] வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்
- [6:055] வே(ற்)று ஆகி விண் ஆகி நின்றாய், போற்றி!
- [5:072] வைத்த மாடும், மனைவியும், மக்கள்,
- [7:014] வைத்தனன் தனக்கே, தலையும் என் நாவும் நெஞ்சமும்;